

ஆத்தூர்
ஆத்தூர் அருகே உள்ள கள்ளாநத்தம் மதுரை வீரன் தெருவை சேர்ந்தவர் கந்தன் (வயது 90). இவர் நேற்று மாலை முட்டல் செல்லும் வழியில் துரைசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தின் கிணற்றின் அருகே கால்நடைகளுக்கு புல் அறுத்து கொண்டிருந்தார். அப்போது அவர் தவறி கிணற்றில் விழுந்து பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆத்தூர் ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.