தீவட்டிப்பட்டி அருகேலாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் சாவு

தீவட்டிப்பட்டி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் இறந்தார்.
தீவட்டிப்பட்டி அருகேலாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் சாவு
Published on

ஓமலூர்

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி குறிஞ்சிப்பட்டி பகுதி சேர்ந்தவர் குமார். இவரது மகன் அறிவழகன் (வயது20). இவர் பூசாரிப்பட்டி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் கல்லூரி முடிந்து வீடு திரும்பினார். தீவட்டிப்பட்டி சமத்துவபுரம் அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரியை அவர் முந்தி செல்ல முயன்றார். அப்போது லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயமடைந்த அறிவழகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com