லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு

ஓசூரில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் இறந்தார்.
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு
Published on

ஓசூர்:

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ராமச்சந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் அருண்குமார் (வயது 26). இவர் தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று அவர், மோட்டார் சைக்கிளில் பேரண்டபள்ளி பகுதியில் உள்ள இருசக்கர வாகன ஷோரூம் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது சாலையோரம் நின்று இருந்த டிப்பர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அருண்குமார் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com