கடலில் மூழ்கி பெண் பலி

கடலில் மூழ்கி பெண் பலியானார்.
கடலில் மூழ்கி பெண் பலி
Published on

சாயல்குடி, 

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கீழமுந்தல் கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி மனைவி மூக்குபபூரி (வயது55). இவர் நேற்று அந்த பகுதியில் உள்ள கடலில் குளிக்க சென்றுள்ளார். அப்போது கடல் அலை சீற்றத்தில் சிக்கி கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் கடற்கரையில் தேடினர். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வாலிநோக்கம் கடற்கரை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் விரைந்தனர். இந்த நிலையில் மூக்குபபூரி உடல் கரை ஒதுங்கியது. அவரது உடலை கைப்பற்றி கடலாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வாலிநோக்கம் கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com