கார் மோதி மூதாட்டி சாவு

காவேரிப்பட்டணம் அருகே கார் மோதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
கார் மோதி மூதாட்டி சாவு
Published on

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் அருகே உள்ள ஆத்தோரத்தான் கொட்டாயை சேர்ந்தவர் கண்ணாயிரம்மாள் (வயது 62). இவர் கடந்த 9-ந் தேதி இரவு தர்மபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அந்த பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற கார் மூதாட்டி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மூதாட்டி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com