யானை தாக்கி முதியவர் சாவு

கெலமங்கலம் அருகே யானை தாக்கி படுகாயமடைந்த முதியவர் பரிதாபமாக இறந்தார். அவரது குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரத்திற்கான நிதி உதவியை வனத்துறையினர் வழங்கினர்.
யானை தாக்கி முதியவர் சாவு
Published on

ராயக்கோட்டை:

கெலமங்கலம் அருகே யானை தாக்கி படுகாயமடைந்த முதியவர் பரிதாபமாக இறந்தார். அவரது குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரத்திற்கான நிதி உதவியை  வனத்துறையினர் வழங்கினர்.

முதியவர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள சாத்தனக்கல்லை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 70). இவர் கடந்த 4-ந் தேதி சாத்தனக்கல் கிராமத்தில் காப்புக்காட்டை ஒட்டியுள்ள நிலத்தில் மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த ஒற்றை யானை அவரை தாக்கியது.

இதில் படுகாயம் அடைந்த கிருஷ்ணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இனிடையே நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

முதல் கட்ட நிதி உதவி

இதையடுத்து, ராயக்கோட்டை வனச்சரகர் பார்த்தசாரதியின் தலைமையில், ஊடேதுர்கம் பிரிவு வனவர் வரதராஜன், வனக்காப்பாளர் ராம்குமார் ஆகியோர் நேற்று கிருஷ்ணனின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். பின்னர் அவரது மனைவி சித்தம்மாவுக்கு முதல் கட்ட இழப்பீட்டு தொகையாக ரூ.50 ஆயிரம்  நிதி உதவியை வழங்கினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com