மயங்கி விழுந்து கல்லூரி மாணவர் சாவு

கபடி விளையாடியபோது மயங்கி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
மயங்கி விழுந்து கல்லூரி மாணவர் சாவு
Published on

திருப்பத்தூர், 

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் டி.புதுப்பட்டியைச் சேர்ந்த செந்தில் மகன் அடைக்கலம் (வயது 19). இவர் திருப்பத்தூர் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். தீபாவளியையொட்டிபுதுக்கோட்டை மாவட்டம் நரியங்காடு என்ற பகுதியில் நடைபெற்ற கபடி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

உடனே சக விளையாட்டு வீரர்கள் பொன்னமராவதி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் தற்போது நடைபெற்ற தமிழ்நாடு ஜூனியர் சாம்பியன்சிப் போட்டியில் சிவகங்கை மாவட்ட அணிக்காக சிறப்பாக விளையாடி தேர்வு பெற்றார். கபடியின் மூலமே அரசு வேலை வாங்க வேண்டும் என்று சக நண்பர்களிடம் அடிக்கடி சொல்லி வந்ததாகக் கூறப்படுகிறது.

கபடி வீரர் இறந்தது டி.புதுப்பட்டி பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பனையபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com