மயங்கி விழுந்த மாணவி சாவு

மயங்கி விழுந்த மாணவி சாவு உயிரிழந்தார்.
மயங்கி விழுந்த மாணவி சாவு
Published on

மதுரை விஸ்வநாதபுரம் மருதுபாண்டியர் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகள் அட்சயா (வயது 19). இவர் திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் கம்ப்யூட்டர் டிப்ளமோ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரி வளாகத்திற்குள் இருந்த போது திடீரென்று மாணவி மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்த போது ஏற்கனவே அட்சயா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Daily Thanthi
www.dailythanthi.com