விஷம் குடித்த மாணவர் சாவு

முக்கூடல் அருகே விஷம் குடித்த மாணவர் பரிதாபமாக இறந்தார்.
விஷம் குடித்த மாணவர் சாவு
Published on

முக்கூடல்:

முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறையை சேர்ந்த ஞானச்செல்வன் மகன் ஜாக்சன் (வயது 21). இவர் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று அரியநாயகிபுரம் அணைக்கட்டு அருகில் ஜாக்சன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜாக்சன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com