டிராக்டர் டயர் வெடித்து வாலிபர் சாவு

பெரியாம்பட்டி அருகே டிராக்டர் டயர் வெடித்து வாலிபர் இறந்தார்.
டிராக்டர் டயர் வெடித்து வாலிபர் சாவு
Published on

காரிமங்கலம்:

காரிமங்கலம் அருகே உள்ள பெரியபூலாபட்டியை சேர்ந்தவர் தர்மன். விவசாயி இவரது மகன் குணசீலன் (வயது19). டிராக்டர் டிரைவர். இவர் நேற்று முன்தினம் காலை பூலாப்பட்டியில் இருந்து பெரியாம்பட்டி நோக்கி டிராக்டரை ஓட்டி சென்றார். அப்போது தேசிய நெடுஞ்சாலை பிரிவு ரோடு அருகே சென்றபோது திடீரென டிராக்டர் டயர் வெடித்தது. இதில் குணசீலன் டிராக்டரில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி குணசீலன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com