பாலக்கோடு அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு

பாலக்கோடு அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
பாலக்கோடு அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
Published on

பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பி.கொல்லப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் வசந்தகுமார் (வயது 20). இவர் டிப்ளமோ படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று காலை இவர் தக்காளி தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது மின் மோட்டார் சுவிட்சை தொட்டபோது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள், அவரை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இது குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com