மாடு முட்டிய பெண் சாவு

ஆம்பூர் அருகே மாடு முட்டிய பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மாடு முட்டிய பெண் சாவு
Published on

ஆம்பூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மிட்டாளம் ஊராட்சி வன்னியநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசன். விவசாயி. இவரது மனைவி நாகம்மாள் (வயது 48). இவர் கடந்த 15-ந் தேதி தனது நிலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரை மாடு முட்டியது.

இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com