தவறி விழுந்த தொழிலாளி சாவு

ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தவறி விழுந்த தொழிலாளி சாவு
Published on

கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நூர்முகமது (வயது 52). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர், புதுவை நைனார்மண்டபத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்றார். அரியாங்குப்பம்- மணவெளி ரோடு சந்திப்பு அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக ஸ்கூட்டரில் இருந்து நூர்முகமது தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை நூர்முகமது பரிதாபமாக இறந்தார்.

விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com