கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு

ஆம்பூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு
கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு
Published on

ஆம்பூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரபீக் நகரை சேர்ந்தவர் அஸ்கார் (வயது 46), தொழிலாளி.

இவர், கிணற்றில் தவறி விழுந்தார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் ஆம்பூர் டவுன் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சுமார் 3 மணி நேரம் தேடியும் அஸ்காரை மீட்க முடியவில்லை. இரவு நேரமானதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து நேற்று காலையில் மீண்டும் தேடினர். 2 மணி நேர தேடுதலுக்கு பிறகு அஸ்காரை பிணமாக மீட்டனர்.

இதனையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com