மாணவி ஸ்ரீமதி மரணம்: பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

கனியாமூர் தனியார் பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
மாணவி ஸ்ரீமதி மரணம்: பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
Published on

விழுப்புரம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி, மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் சாவு குறித்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

மேலும் இவ்வழக்கில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைதான பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்பட 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார், ஒரு நாள் காவலில் எடுத்து அவர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் கனியாமூர் தனியார் பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமின் மனு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில் விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு ஒத்திவைத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com