திண்டுக்கல்: புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு காளை மரணம்

திண்டுக்கல் அருகே மலையாண்டிசுவாமி கோவிலுக்கு சொந்தமான சண்டியர் எனும் ஜல்லிக்கட்டு காளை பாம்பு கடித்ததில் மரணமடைந்தது.
திண்டுக்கல்: புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு காளை மரணம்
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பூதகுடி ஊராட்சிக்குட்பட்ட சடையம்பட்டி மலையாண்டிசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கிராமத்தின் சார்பாக கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே மங்களாம்பட்டி ஊரில் 1 வயதுடைய காளைக்கன்று விலைக்கு வாங்கி கிராம மக்கள் அதிக பாசத்துடன் வளர்த்து வந்தனர்.

நத்தம் சுற்றுவட்டாரத்தில் மலையாண்டிசுவாமி சண்டியர் காளையின் கம்பீரமும், வனப்பும் பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த காளையை சண்டியர் என்றே செல்லமாக அழைத்தனர்.

இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு விஷப் பாம்பு கடித்தது மூன்று நாட்களாக ஊர் மக்கள் மருத்துவம் செய்தனர்.ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்தது.

இந்த சண்டியர் காளை அலங்காநல்லூர், பாலமேடு, குலமங்களம், கொசவபட்டி, சங்கரன்பாறை, தவசிமடை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நடைபெற்ற ஜல்லிகட்டில் பங்கேற்று தங்கம், வெள்ளி, காசுகளையும் மற்றும் பல்வேறு பரிசுகளையும் பெற்று வீரர்களுக்கு சவால் விட்டு பெயரையும், புகழையும் பெற்று கிராமத்திற்கு பெருமை சேர்த்து தந்தது.

சுற்றுவட்டார கிராமமக்கள் ஒன்று கூடி வேஷ்டி, துண்டுகள், மாலைகள் அணிவித்து சந்தனம் பூசி இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் மேளதாளம் முழங்க ஒரு வாகனத்தில் இறந்த கோவில் காளை எடுத்து செல்லப்பட்டு கோவில் அருகில் அடக்கம் செய்யப்பட்டது. கிராமத்திற்கு பெருமை சேர்ந்த கோவில் காளை இறந்ததால் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com