நெல்லையில் ஒருவருக்கு கொலை மிரட்டல்; 3 பேர் கைது

நெல்லை மாநகரில் ஒருவரை பைக்கில் வந்த 3 பேர் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
நெல்லையில் ஒருவருக்கு கொலை மிரட்டல்; 3 பேர் கைது
Published on

திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம், கார்த்திகேயன்நகர் ஆட்டோ நிறுத்தம் அருகே நேற்று ரெட்டியார்பட்டியை சேர்ந்த முருகன் (வயது 41) என்பவரை இரு சக்கர வாகனத்தில் வந்த பாளையங்கோட்டையை சேர்ந்த ரமேஷ்(30), தியாகராஜநகரைச் சேர்ந்த தினேஷ்பாஸ்கர்(29) மற்றும் கணேஷ்குமார்(31) ஆகிய 3 பேர் சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவதூறாக பேசி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து முருகன் கொடுத்த புகாரின்பேரில் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து மேற்சொன்ன 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com