எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜிலா(வயது 26). இவர் காடல்குடி அருகே மாவிலோடை பகுதியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 4-ந்தேதி அவர், தனது தங்கையுடன் ரேஷன் கடையில் இருந்துள்ளார். அங்கு ரேஷன் பொருட்கள் வாங்க மாவிலோடை பகுதியை சேர்ந்த குமரையா மகன் பிரதீப் மேனன் (வயது 48) என்ற டாஸ்மாக் கடை விற்பனையாளர் வந்துள்ளார். அவர் விற்பனையாளரின் தங்கை ரேஷன் பொருட்களை எடைபோடும் போது செல்போனில் படம் எடுத்துள்ளார். இதை கண்டித்த விற்பனையாளரை பிரதீப் மேனன் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் காடல்குடி சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர நாகராஜன் வழக்குப்பதிவு செய்து பிரதீப் மேனனை கைது செய்தார்