அரசு மருத்துவமனை டாக்டருக்கு கொலை மிரட்டல்

அரசு மருத்துவமனை டாக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அரசு மருத்துவமனை டாக்டருக்கு கொலை மிரட்டல்
Published on

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருபவர் சரவணன். இவர் பணியில் இருந்தபோது சொக்கம்பட்டியை சேர்ந்த கதிரவன் (வயது 45) என்பவர் அவரது மனைவியை சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு டாக்டர் சரவணன் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார். அப்போது கதிரவன் டாக்டரிடம் வேகமாக சிகிச்சை அளியுங்கள் என கூறி தகாத வார்த்தையால் திட்டி தகராறு செய்துள்ளார். மேலும் அவரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்க முயன்று கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து டாக்டர் சரவணன் இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், இலுப்பூர் போலீசார் கதிரவன் மீது அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com