லாரி டிரைவருக்கு கொலை மிரட்டல்; 2 பேர் மீது வழக்கு

மானூர் அருகே லாரி டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
லாரி டிரைவருக்கு கொலை மிரட்டல்; 2 பேர் மீது வழக்கு
Published on

மானூர்:

மானூர் அருகே உள்ள தெற்கு வாகைக்குளத்தைச் சேர்ந்தவர் இசக்கித்துரை (வயது 25). லாரி டிரைவர். இவர், அதே ஊரைச் சேர்ந்த துரைராஜ் (43) என்பவரிடம் கடன் வாங்கி உள்ளார். இதில் அவர்களுக்குள் பிரச்சினை இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று இசக்கித்துரை, தெற்கு வாகைக்குளத்தில் உள்ள ஒரு நபருக்கு, தனது லாரியில் ஏற்றி வந்த எம்.சாண்ட்டை இறக்கி கொண்டிருந்தபோது, அங்கு துரைராஜ், அவரது உறவினர் கரன் (20) என்பவருடன் அரிவாள் மற்றும் கம்புடன் வந்து இசக்கித்துரையை கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அவர் கூச்சலிடவே, அக்கம்பக்கத்தினர் வந்ததும், இசக்கித்துரைக்கு இருவரும் கொலை மிரட்டல் விடுத்து விட்டு ஓடிவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com