கர்ப்பிணிக்கு கொலை மிரட்டல்; கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு

கர்ப்பிணிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கர்ப்பிணிக்கு கொலை மிரட்டல்; கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு
Published on

தேனி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 28). இவருக்கும், அன்னஞ்சி வாசுநகரை சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். மேலும் தற்போது விஜயலட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.

சதீஷ்குமார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் பணியாற்றும் பெண்ணுக்கும், சதீஷ்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அந்த பெண்ணை சதீஷ்குமார் 2-வதாக திருமணம் செய்ய இருப்பதாக விஜயலட்சுமிக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர் தனது கணவரிடம் கேட்டார். அப்போது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் சதீஷ்குமாருடன் சேர்ந்து அவரது தந்தை பரசுராமன், தாய் பொன்னம்மாள் ஆகியோர் விஜயலட்சுமியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேனி அல்லிநகரம் போலீசில் விஜயலட்சுமி புகார் அளித்தார். அதன்பேரில் சதீஷ்குமார், அவரது தந்தை, தாய் ஆகியோர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதேபோல் தேனி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த பாண்டித்துரை, ராமகிருஷ்ணன், ஒச்சம்மாள், விஜயலட்சுமி ஆகியோர் தன்னையும், தனது மனைவி பொன்னம்மாளையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக பரசுராமன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com