தொழிலாளிக்கு கொலை மிரட்டல்

தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தொழிலாளிக்கு கொலை மிரட்டல்
Published on

போடி வினோபாஜி காலனியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 47). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இவர், மீனாட்சிபுரம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தனர். பின்னர் அவர்கள் முருகனிடம் தகராறு செய்து, தகாத வார்த்தைகளால் பேசினர். மேலும் பாட்டில்களால் அவரது முகத்தில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து முருகன் போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் முருகனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக போடி அருகே உள்ள மேலசொக்கநாதபுரத்தை சேர்ந்த மணி உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com