

நாமக்கல்,
மது குடித்து விட்டு செத்து போவதா என்று மதுபிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் அத்தனூர் அருகே அமைந்துள்ள மது கடையில் நேற்று இரவு மது வாங்குவதற்காக 2 பேர் வந்துள்ளனர். அப்போது பாட்டிலை வாங்கி குடிக்க முற்பட்ட போது அதில் தூசி மற்றும் குப்பைகளை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்களின் முன்னிலையில் மது பிரியர்கள் குப்பை உள்ள மது பாட்டிலுடன் குற்றம் சாட்டியுள்ளனர்.
ரூ.300 கொடுத்து 2 மது பாட்டில்கள் வாங்கியுள்ளனர். அதில் ஒரு பாட்டிலை இருவரும் குடித்துவிட்டனர். பின்னர், மற்றொரு பாட்டிலை எடுத்து குடிக்க முற்பட்ட போது குப்பைகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். “இதனை குடித்து விட்டு நாங்கள் செத்து போவதா? இதற்கு ஒரு தீர்வு வேண்டும்” என்று மதுபிரியர்கள் கூறியுள்ளனர்.