டிசம்பர் 30: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏதுமின்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
டிசம்பர் 30: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
Published on

சென்னை,

நாடு முழுதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மே வரை பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஜூன் முதல் அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 86.51 ரூபாய், டீசல் லிட்டர் 79.21 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், பெட்ரோல் விலை இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை. டீசல் விலையிலும் மாற்றம் செய்யப்படாமல் ஒரே விலையில் நீடிக்கிறது.

அதன்படி, பெட்ரோல், லிட்டர் 86.51 ரூபாய், டீசல் லிட்டர் 79.21 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெட்ரோல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த நிலையில் தற்போது விலையில் மாற்றமில்லாதது வாகன ஓட்டிகளிடையே நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com