சென்னையில் விரைவில் குடிநீர் ஏ.டி.எம்.கள் அமைக்க முடிவு


சென்னையில் விரைவில் குடிநீர் ஏ.டி.எம்.கள் அமைக்க முடிவு
x

கடற்கரை, பேருந்து நிலையம், பூங்கா, பள்ளிகள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குடிநீர் ஏ.டி.எம்.களை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

சென்னை,

சென்னையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தூய்மையான மற்றும் பாதுகாப்பான குடிநீரை வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது. வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு குழாய் வழியாகவும், தண்ணீர் வாகனங்கள் உதவியுடனும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இதுதவிர, சென்னையின் பல்வேறு பகுதிகளில் மக்களின் வசதிக்காகவும், தேவைக்காகவும் தூய்மையான மற்றும் பாதுகாப்பான குடிநீரை வழங்குவதற்காக சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வாரியம் இணைந்து புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, சென்னையில் குடிநீர் ஏ.டி.எம்.களை திறக்க முடிவாகி உள்ளது. முதல்கட்டத்தில் 40 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம்.கள் அமைக்கப்பட்டு உள்ளன. இது பின்னர், 50 இடங்களாக விரைவில் விரிவுப்படுத்தப்படும். இதில், 150 மி.லி. மற்றும் 1 லிட்டர் என இரண்டு வகையாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் இருக்கும். பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.

கடற்கரை, பேருந்து நிலையம், பூங்கா, பள்ளிகள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குடிநீர் ஏ.டி.எம்.களை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதனுடன், குடிநீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குடிநீர் ஏ.டி.எம்.களுக்கு சேதம் ஏற்படாத வகையிலும், அவற்றை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன்படி, குடிநீர் ஏ.டி.எம்.களை சி.சி.டி.வி. மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதேபோன்று, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள தனி குழுவை அமைக்கவும் சென்னை குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. இரவிலும் மக்களுக்கு தெரிய வேண்டும் என்ற வகையில் எல்.இ.டி. விளக்குகளின் இணைப்பும் கொடுக்கப்பட்டு உள்ளன. விரைவில், தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வருவார் என கூறப்படுகிறது.

1 More update

Next Story