குறைந்து வரும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கனஅடியில் 1,275 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி
Published on: 

குன்றத்தூர்,

செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடியது செம்பரம்பாக்கம் ஏரி. தினந்தோறும் ஏரியில் இருந்து தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு சென்னை நகர மக்களுக்கு குடிநீராக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது போதிய மழை இல்லாத காரணத்தால் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரியின் 5 கண் மற்றும் 19 கண் மதகுகள் பகுதி வறண்ட நிலையில் காணப்படுகிறது. நேற்றய நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கனஅடியில் 1,275 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.

நீர்மட்டம்

தற்போது செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் சிக்கராயபுரம் கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு சென்னை நகர மக்களுக்கு குடிநீராக வழங்கப்பட்டு வருகிறது. சென்னை குடிநீருக்காக தினமும் 130 கனஅடி நீர் கொடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஏரியின் நீர்மட்டத்தை அதிகாரிகள் கண்காணித்து அதற்கு ஏற்ப தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போதைய சூழலில் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தாலும் சென்னை நகர மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு எதுவும் ஏற்படாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com