காசிமேடு மீன் சந்தையில் குறைந்துள்ள மீன்கள் விலை

காசிமேடு சந்தையில் மீன் வரத்து அதிகரித்துள்ளதன் காரணமாக மீன்களின் விலை குறைந்துள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

சென்னை காசிமேடு மீன் சந்தையில் மீன்கள் வாங்க மீன்பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. வார விடுமுறை நாளான இன்று ஏராளமானோர் மீன்கள் வாங்க குவிந்தனர். இதனால், மீன் சந்தை களைகட்டியது.

மேலும், சந்தைக்கு மீன்களின் வரத்து அதிகரித்து கானப்பட்டது. இதன் காரணமாக மீன்களின் விலையும் குறைந்து கானப்பட்டது. வஞ்சிரம் கிலோ ரூ.1,100, தேங்காய் பாறை ரூ.700, பர்லா ரூ.380, சங்கரா ரூ.300 க்கும் விற்பனையானது.

அதேபோல, நெத்திலி, வெள்ளை ஊடான் ரூ.100 க்கும், கடம்மா ரூ.280, தோல் பாறை ரூ.300, இறால், நண்டு ரூ.350 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com