சென்னை அடையாறு ஆற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு - போலீஸ் தீவிர விசாரணை

சடலத்தின் முகம் சிதைந்திருந்ததுடன், தலை மற்றும் முகம் துணியால் கட்டப்பட்டிருந்ததால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை அடையாறு ஆற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு - போலீஸ் தீவிர விசாரணை
Published on: 

சென்னை,

சென்னை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் உள்ள அடையாறு ஆற்றில், சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. ஆற்றில் பாலப்பணிகள் நடைபெறும் இடத்திற்கு அருகே, மணல் மேட்டில் சடலம் கிடப்பதைப் பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அடையாளம் காண்பதில் சிக்கல்

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கர் நகர் போலீசார், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்டனர். சுமார் 6 நாட்களுக்கு முன்பு உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படும் அந்த நபரின் முகம் சிதைந்திருந்ததுடன், தலை மற்றும் முகம் துணியால் கட்டப்பட்டிருந்ததால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சடலம் பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

X