திருவெண்ணெய்நல்லூர் அருகே அழுகிய நிலையில் பெண் பிணம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே அழுகிய நிலையில் பெண் பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவெண்ணெய்நல்லூர் அருகே அழுகிய நிலையில் பெண் பிணம்
Published on

திருவெண்ணெய்நல்லூர், 

பெண் பிணம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே சின்னசெவலை மலட்டாற்றில் 40 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது. இதை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் உடனே இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் இறந்து கிடந்த பெண்ணின் உடலை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணை

இருப்பினும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இறந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை யாரேனும் கொலை செய்தனரா? என்று பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com