தட்கல் முறையில் பத்திரப்பதிவு - அரசாணை வெளியீடு

தமிழகத்தில் தட்கல் முறையில் பத்திரப்பதிவு செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தட்கல் முறையில் பத்திரப்பதிவு - அரசாணை வெளியீடு
Published on

சென்னை,

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, பத்திரப்பதிவை விரைந்து மேற்கொள்ள வசதியாக 'தட்கல்' முறை கொண்டு வரப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இது குறித்து பத்திரப்பதிவு துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள அரசாணையில்,

தமிழகத்தில் தட்கல் பத்திரப்பதிவு நடைமுறை முதற்கட்டமாக 100 சார் பதிவாளர் அலுவலகங்களில் செயல்படுத்தப்படும். தினசரி அதிகளவில் பத்திரப்பதிவு நடைபெறும் 100 அலுவலகங்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த 100 சார் பதிவாளர் அலுவலகங்களிலும், அதிகபட்சமாக தினசரி தலா 10 தட்கல் பத்திரப்பதிவுகள் செய்யப்படும். தட்கல் முறையில் பத்திரப்பதிவு செய்ய ரூ.5 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com