வாகனம் மோதி மான் சாவு

தேவகோட்டை அருகே வாகனம் மோதி புள்ளிமான் இறந்தது.
வாகனம் மோதி மான் சாவு
Published on

தேவகோட்டை

தேவகோட்டை அருகே வாகனம் மோதி புள்ளிமான் இறந்தது.

தொடரும் சம்பவம்

தேவகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதியில் அதிக அளவில் மான்கள் நடமாட்டம் உள்ளது. நகரின் எல்லை பகுதியில் தற்போது புதிதாக அமைக்கப்பட்ட திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் வாகன ஓட்டிகள் அதிவேகமாக செல்கின்றனர்.

அமராவதி புதூரில் இருந்து புளியால் வரை உள்ள காட்டுப்பகுதிகளில் ஏராளமான மான்கள் உள்ளது.

இந்த பகுதியில் இருந்து கிராம பகுதிகளுக்கு தண்ணீர் குடிப்பதற்காக மான்கள் நெடுஞ்சாலையை கடந்து அவ்வப்போது வருவது வழக்கம். அப்படி சாலையை கடந்து வரும் போது வேகமாக வரும் வாகனங்கள் மோதி மான்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

மான் சாவு

இந்த நிலையில், நேற்று காலையில் தேவகோட்டை அருகே திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் மாரிச்சான்பட்டி அருகே தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து ஆண் புள்ளிமான் ஒன்று வந்தது. இந்த மான் அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.

இதில் படுகாயம் அடைந்த மான் பரிதாபமாக இறந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மானின் உடலை எடுத்து சென்று வனப்பகுதியில் அடக்கம் செய்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com