முதல்-அமைச்சர் மீது அவதூறு: ‘யூடியூப்’ சேனல்கள் மீது ‘சைபர் கிரைம்’ போலீசார் வழக்குப்பதிவு

சென்னை கிழக்கு மண்டல ‘சைபர் கிரைம்' போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை,
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி சமீபத்தில் புகார் மனு அளித்திருந்தார். அதில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோரை அவதூறாகவும், கேலியாகவும், ஒழுக்கமற்ற விதமாகவும் சித்தரித்து சமூக வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த பதிவுகளை நீக்கி, இதனை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார். அவதூறு பரப்பியதாக சில யூடியூப் சேனல்கள், இன்ஸ்ட்ராகிராம் கணக்குகளையும் புகார் மனுவில் இணைந்திருந்தார்.
இந்த புகார் அடிப்படையில் தமிழ்நாடு பா.ஜனதா, தளபதி ட்ரோல், உங்கள் வீட்டு பிள்ளை, டி.வி.கே.ரசிகர்கள் உள்ளிட்ட ‘இன்ஸ்ட்கிராம்' மற்றும் ‘யூடியூப்' சேனல் நிர்வாகிகள் மீது சென்னை கிழக்கு மண்டல ‘சைபர் கிரைம்' போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






