அரசு பள்ளி வகுப்பறைக்குள் மனிதக் கழிவு வீச்சு: போலீசார் தீவிர விசாரணை

அரசுப் பள்ளியின் வகுப்பறைக்குள் மனிதக் கழிவை அடையாளம் தெரியாத நபர்கள் வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பல்லடம்,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அரசுப் பள்ளியின் வகுப்பறைக்குள் அடையாளம் தெரியாத நபர்கள் மனிதக் கழிவை வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையம் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு வகுப்பறைக்குள் மர்ம நபர்கள் மனிதக் கழிவை வீசிச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பள்ளி மாணவர்களே இச்செயலில் ஈடுபட்டார்களா? அல்லது மர்ம நபர்களா? என்பது குறித்து பல்லடம் டி.எஸ்.பி. தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story






