"நிச்சயம் அடுத்த முறை தங்கம் வெல்வேன்" - மாரியப்பன் தங்கவேலு பேட்டி

நிச்சயம் அடுத்த முறை தங்கம் வெல்வேன் என பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலு கூறினார்.
"நிச்சயம் அடுத்த முறை தங்கம் வெல்வேன்" - மாரியப்பன் தங்கவேலு பேட்டி
Published on

சென்னை,

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு டெல்லியில் நேற்று பாராட்டு விழா நடந்தது. மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் பங்கேற்று பாராட்டு தெரிவித்தார். இதையடுத்து விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில், தமிழக பாராலிம்பிக் சங்கம் சார்பில் மாரியப்பனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மாரியப்பன் தங்கவேலு இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார். அப்போது வெள்ளி வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த மாரியப்பனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார்.

பின்னர் மாரியப்பன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

"தமிழக முதல்-அமைச்சரை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். முதல்-அமைச்சர் எனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். அரசு வேலை வழங்குமாறு முதல்-அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தேன். அரசு பணி வழங்குவதாக முதல்-அமைச்சர் உறுதி அளித்தார்.

பாராஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்ல முடியாமல் வெள்ளிப்பதக்கம் கிடைத்ததில் சிறிது வருத்தம் அளிக்கிறது. போட்டி நடந்தபோது டோக்கியோவில் மழை பெய்ததால் தங்கம் வெல்ல முடியவில்லை. அடுத்த பாராஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் தங்கம் வெல்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது மாரியப்பனுடன், திமுக எம்பி கனிமொழி உடனிருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com