செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
Published on

சிவகாசி, 

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட சோலை காலனியில் 2015-2016-ம் நிதியாண்டில் ரூ.5 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் அந்த பகுதி மக்கள் குடிநீர் பெற்று வந்தனர். நாளடைவில் இந்த சுத்திகரிப்பு நிலையம் செயல்படாமல் போனது. அப்போதைய நகராட்சி நிர்வாகம் இதனை கண்டுக்கொள்ளாமல் விட்டு விட்டது. இதனால் தற்போது வரை இந்த சுத்திகரிப்பு நிலையம் செயல்படாமல் இருக்கிறது. இதற்காக அமைக்கப்பட்ட தகரசெட்டில் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் அதிக அளவில் இருப்பதாக கூறப்படுகிறது. இவைகள் இரவு நேரங்களில் சாலைகளில் நடமாடுவதாகவும் புகார்கள் எழுகிறது. அதனால் இந்த தகரசெட்டினை அகற்றி அந்த பகுதியை சுத்தம் செய்து தரும்படி அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com