“ஆட்சி மாற்றத்திற்கு பிறகு ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் தொய்வு” - அமைச்சர் கே.என்.நேரு

தமிழகத்தில் 10 நகரங்களில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
“ஆட்சி மாற்றத்திற்கு பிறகு ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் தொய்வு” - அமைச்சர் கே.என்.நேரு
Published on

சென்னை,

தமிழக சட்டசபையில் இன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு நகர்ப்புற வளர்ச்சித்துறை கே.என்.நேரு பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

தமிழகத்தில் 10 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட சூழலில், ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்காக டெண்டர் எடுத்த குத்தகைதாரர்கள் பணிகளை தொடர்ந்து செய்யாததால், அதில் தொய்வு ஏற்பட்டது.

இதையடுத்து குத்தகைதாரர்களை அழைத்து அவர்களிடம் பணிகளை தொடர்வது குறித்து அரசின் அறிவுறுத்தலுக்குப் பிறகு, பணிகள் ஒவ்வொரு இடமாக முடிக்கப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகளை அனைத்தையும் விரைந்து முடிக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எனவே எந்தெந்த இடங்களில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்து விரைவில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com