சென்னை விமான நிலையத்தில் முதல் ஓடுபாதையை மறுசீரமைப்பு செய்யும் பணியில் தாமதம்

சென்னை விமான நிலையத்தில் தற்போது 2 ஓடுபாதைகள் உள்ளன.
சென்னை விமான நிலையத்தில் முதல் ஓடுபாதையை மறுசீரமைப்பு செய்யும் பணியில் தாமதம்
Published on

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்கள் 1,350 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. விமானம் மற்றும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

விமான நிலையத்தில் தற்போது 2 ஓடுபாதைகள் உள்ளன. அதில் முதல் ஓடுபாதை 3,658 மீட்டா நீளமும், 45 மீட்டர் அகலமும் கொண்டது. 2-வது ஓடுபாதை 2,890 மீட்டர் நீளமும், 45 மீட்டர் அகலமும் கொண்டது. 2-வது ஓடுதளத்தை முழுமையாக பயன்படுத்த 509 தடைகளை விமான நிலையம் அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனால் 2-வது ஓடுதளத்தில் சிறிய ரக விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் 2-வது ஓடுபாதை முழுமையாக செயல்பாட்டுக்கு வராததால், முதல் ஓடுபாதையை கட்டாயம் மறுசீரமைப்பு செய்ய வேண்டிய பணிகளில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓடுபாதை மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்பதால், 3.66 கி.மீ நீளமுடைய முதல் ஓடுபாதையை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. நீளம் குறைவு உள்ளிட்ட காரணங்களால் 2-வது ஓடுபாதையை முழுமையாக பயன்படுத்த இயலவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com