டெல்லி பயணம் நிறைவு: சென்னை திரும்பினார் முதல்-அமைச்சர் விஜய்

சோனியா, ராகுல் உடனான முதல்-அமைச்சர் விஜய்யின் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.
டெல்லி பயணம் நிறைவு: சென்னை திரும்பினார் முதல்-அமைச்சர் விஜய்
Published on

சென்னை,

முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக விஜய், 2 நாட்கள் அரசுமுறைப் பயணமாக நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய விஜய், தொடர்ந்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாரமனை சந்தித்து பேசினார். அவர்களிடம் தமிழக அரசுக்கான பல்வேறு திட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்.

இதனை தொடர்ந்து, இன்றைய தினம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும். நாடாளுமன்ற குழு தலைவருமான சோனியா காந்தியை அவரது இல்லத்தில் தமிழக முதல்-அமைச்சர் மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. தொடர்ந்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் நிதி உதவியோடு நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைப்பார் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சோனியா, ராகுல் உடனான முதல்-அமைச்சர் விஜய்யின் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. தனது 2 நாள் அரசு முறை பயணத்தை முடித்துவிட்டு முதல்-அமைச்சர் விஜய் தனது இன்று காலை சென்னை புறப்பட்டார். அவர் தனி விமானம் மூலம் தற்போது டெல்லியில் இருந்து சென்னை வந்தடைந்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com