

சென்னை,
தமிழ்நாட்டில் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கையம் அதிகரித்து வருகிறது.இதனால் தமிழகத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது ;
நாளை முதல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்க்ளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது.தடுப்பூசி போடும் பணியை நாளை முதல்- அமைச்சர் தொடக்கி வைக்கிறார் .ஜனவரி 10 முதல் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படவுள்ளது.
2ம் தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்களுக்கு பிறகு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது . முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 முதல் 4 நாட்களிலேயே நெகடிவ் என வந்து விடுகிறது.தமிழகத்தல் டெல்டா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் இணைந்து 3 ம் அலையாக பரவுகிறது .
இவ்வாறு அவர் கூறினார்.