ஈரோடு-திருச்செந்தூர் இடையே புதிய ரெயில் சேவை தேவை: விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநிலத் தலைவர் குப்புசாமி, மத்திய இணை மந்திரி எல்.முருகனுக்கு மனு அளித்துள்ளார்.
ஈரோடு-திருச்செந்தூர் இடையே புதிய ரெயில் சேவை தேவை: விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை
Published on

ஈரோடு,

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநிலத் தலைவர் குப்புசாமி, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் இணை மந்திரி எல்.முருகனுக்கு மனு அனுப்பியுள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு-திருச்செந்தூர் புதிய விரைவு ரெயிலை திருப்பூர், கோவை, கிணத் துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை வழியாக இயக்க வேண்டும். இந்த புதிய ரெயில் சேவை மூலம் மேற்கு மற்றும் தென் தமிழ்நாட்டிற்கு இடையே நேரடி ரெயில் இணைப்பு கிடைக்கும். இதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடு மலை, பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் மற்றும் பக்தர்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறும். முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி தண்டாயுத பாணி சாமி கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இப்புதிய ரெயில் சேவை தொடங்கப்பட்டால் பழனி மட்டுமின்றி, பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம் மற்றும் அறுபடை வீடு களில் ஒன்றான திருச்செந்தூர் ஆகிய முக்கிய முருகத் திருத்தலங்களுக் கும் ஒரே நேரடி ரெயில் மூலம் பக்தர்கள் எளிதாகச் சென்று வர முடி யும்.பக்தர்களுக்கு மட்டுமின்றி ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலை, பழனி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் வேளாண் வணிகர்களுக்கும் தென் மாவட்டங்களுடன் நேரடி போக்குவரத்து வசதி கிடைக்கும். எனவே, பொதுமக்களின் நலன் கருதி ஈரோடு-திருச்செந் தூர் விரைவு ரெயிலை விரைவில் இயக்க ரெயில்வே அமைச்சகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com