சாத்தான்குளம் வாரச் சந்தையில் குத்தகை காலம் முடிந்த பிறகு புதிய கடைகளை ஏலம் விட கோரிக்கை

சாத்தான்குளம் வாரச் சந்தையில் குத்தகை காலம் முடிந்த பிறகு புதிய கடைகளை ஏலம் விட கோரிக்கை மனு கொடுத்தனர்.
சாத்தான்குளம் வாரச் சந்தையில் குத்தகை காலம் முடிந்த பிறகு புதிய கடைகளை ஏலம் விட கோரிக்கை
Published on

தட்டார்மடம்:

சாத்தான்குளம் நகரப்பஞ்சாயத்து சார்பில் வாரச்சந்தை குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அதில் தற்போது புதிதாக 12 கடைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த கடைகளை வாடகைக்கு விடுவதற்காக நகரப்பஞ்சாயத்து செயல் அலுவலர் முன்னிலையில் ஏலம் விடுவதாக அறிவிப்பு வெளியானது. 6 கடைகளுக்கு வைப்புத் தொகை செலுத்தப்பட்ட நிலையில் வாரச் சந்தை குத்தகை காலம் முடிவதற்கு 9 மாதங்கள் உள்ளன. எனவே புதிதாக கட்டப்பட்ட கடைகளை குத்தகை காலம் முடிந்த பிறகு வாடகைக்கு ஏலம் விட வேண்டும் என்று வலியுறுத்தி நகரப்பஞ்சாயத்து கவுன்சிலர் மகாராஜன், முன்னாள் நகரப்பஞ்சாயத்து தலைவர் தங்கத்தாய், பா.ஜ.க. முன்னாள் நகர தலைவர் ராம் மோகன் ஆகியோர் நகரப்பஞ்சாயத்து செயல் அலுவலர் உஷாவிடம் மனு கொடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com