போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்ற கோரிக்கை

கரூர் காந்திகிராமத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என சாலை பாதுகாப்புகுழு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்ற கோரிக்கை
Published on

பாதுகாப்பு குழு கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட அளவிலான சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கரூர் ஜவகர் பஜார் கோட்டைமேடு பள்ளி அருகில் தோண்டப்பட்ட சாக்கடைகளை மூட வேண்டும். அன்மையில் பெய்த மழையினால் கழிவு நீர் தேங்கிய வண்ணம் உள்ளதை நீக்க வேண்டும். கரூர் காந்திகிராமம் சாலையில் இருபுறமும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்ற வேண்டும். கரூர் காந்திகிராமம் டெல்லி ஸ்வீட்ஸ் அருகே உள்ள சாலையில் தரை கடைகள் வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளவற்றை அகற்ற வேண்டும். தாந்தோணிமலையில் இருந்து பொன்நகர் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்.

ஆய்வு செய்ய வேண்டும்

மேலும், கரூர் மாவட்டத்தில் இரண்டு சக்கர வண்டி விற்பனையாளர்கள் புதிய வண்டிகளை பதிவு செய்யாமல் வாடிக்கையாளர்களுக்கு விற்று வருகிறார்கள் எனவே புதிய வண்டிகளை பதிவு செய்த பின்பு வாடிக்கையாளர்களுக்கு ஒப்படைக்க வேண்டும்.புதிய இரண்டு சக்கர வாகனங்களும் நான்கு சக்கர வாகனங்களும் பதிவு செய்யப்பட்ட பின்பு பதிவு எண்களை நம்பர் பிளேட்டில் எழுதாமல் ஓட்டுவதை ஆய்வு செய்ய வேண்டும் என சாலை பாதுகாப்பு குழு மூலம் கோரிக்கை வைக்கப்பட்டது.. இதையடுத்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆய்வு செய்து பணிகளை மேற்கொள்ள கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவிட்டார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், மாவட்ட கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு கீதாஞ்சலி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தண்டயுதாபாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com