திருவாரூரில் இடைத்தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு

திருவாரூரில் இடைத்தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது.
திருவாரூரில் இடைத்தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு
Published on

திருவாரூர்,

கருணாநிதி மறைவு காரணமாக திருவாரூர் தொகுதி காலியாக உள்ளது. இந்த நிலையில், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, வேட்பு மனு தாக்கல் ஜனவரி 3 ஆம் தேதி துவங்கும். வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஜனவரி 10 ஆம் தேதி ஆகும். வேட்பு மனு பரிசீலனை ஜனவரி 11 ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப்பெற ஜனவரி 14 ஆம் தேதி கடைசி நாளாகும்.

ஜனவரி 28 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். வாக்குகள் எண்ணிக்கை 31 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருவாரூரில் இடைத்தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

திருவாரூரை சேர்ந்த மாரிமுத்து என்பவர் உச்சநீதிமன்றத்தில் செய்துள்ள முறையீட்டு மனுவில், கஜா புயலால் திருவாரூர் மக்கள் பல ஆவணங்களை இழந்துள்ளனர். ஆவணங்கள் இல்லாததால் பலருக்கு ஓட்டு உரிமை பறிபோகும் நிலை உள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரியதற்கு சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com