

பிரபல நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ் சினிமாவில் தனது தனித்துவ திரைக்கதை பாணியால் வெகுவாக ஈர்த்தவரும், நகைச்சுவையுடன் கூடிய நடிப்பாற்றலால் ரசிகர்களை மகிழ்வித்தவருமான பாக்யராஜின் இழப்பால் தமிழ்த் திரையுலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. பாக்யராஜ் உடலுக்கு திரை உலகத்தினர் பெருந்திரளாக திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இயக்குனர் பாக்யராஜ் மறைவுக்கு அமைச்சர் வன்னி அரசு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: இயக்குனர் கே.பாக்யராஜ் அவர்கள் இன்று மறைந்தார் என்னும் துயரச்செய்தி அதிர்ச்சியை தருகிறது.திரை உலகில் தனக்கென தனித்துவத்தை உருவாக்கிக்கொண்டவர்.இது நம்ம ஆளு படைப்பின் மூலம் பார்ப்பனிய ஆதிக்கத்தை எதிர்த்தவர்.எளிய மனிதர்களின் குரலாக நாயகனாக பேசியவர்.கடந்த 2025 ஆகஸ்ட் 17 அன்று எமது தலைவர் எழுச்சித்தமிழர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று வாழ்த்தினார்.
அழைப்பிதழ் கொடுக்க சென்றபோது,உற்சாகமாக வரவேற்று நீண்ட நேரம் உரையாடினார்.அவரது இழப்பு திரை உலகுக்கே பெரும் இழப்பாகும். அவருக்கு விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.