ஜனநாயகப் போராட்டங்களை ஒடுக்க முடியாது: எல்.முருகன்

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை மறைக்க திமுக அரசு முயற்சிப்பதாக இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகப் போராட்டங்களை ஒடுக்க முடியாது: எல்.முருகன்
Published on

சென்னை,

மத்திய இணை மந்திரி எல். முருகன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது,

அண்ணா பல்கலைக்கழக மாணவி திமுக நிர்வாகியால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்தும், குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கோரி பாஜக மகளிர் அணியினர் நடத்த இருந்த நீதி கேட்பு பேரணிக்கு அனுமதி மறுத்ததோடு, மகளிர் அணி நிர்வாகிகளை வீட்டுக் காவலிலும் வைத்திருக்கும் போலி திராவிட மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தை மறைக்கும் முயற்சியிலேயே திமுக அரசு ஈடுபடுகிறது.

மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை முன்னிறுத்தி போராடும் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக ஒடுக்குமுறையை ஏவி விடுவது கண்டிக்க தக்கது.

ஜனநாயக போராட்டங்களை காவல்துறையை ஏவி ஒடுக்கி விட முடியாது. இதற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வில்லை. மாறாக பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்கவும் மக்களுக்கு தெரியாமல் மறைக்கவும் போலி திராவிட மாடல் அரசு செயல்படுகிறது.

வரும் காலங்களில் இதற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com