ஆர்ப்பாட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம்
Published on

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் சக்திவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள்கட்சி, தமிழ் புலிகள் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து விதிமுறை மீறலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்ககளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்பு தமிழ்நாடு காது கேளாதோர், வாய் பேசாதோர் உரிமைகள் நல அமைப்பின் சார்பில் மாநில கிளை உறுப்பினர் தனபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது அனைத்து அரசு அலுவலகங்களிலும், போலீஸ் நிலையங்களிலும், அரசு ஆஸ்பத்திரிகளிலும் சைகை மொழிபெயர்ப்பாளர் நியமனம் செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com