சேலத்தில்தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சேலத்தில் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலத்தில்தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

சேலம்

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் மண்டல அளவிலான ஆர்ப்பாட்டம் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். நகர கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களின் ஊதிய ஒப்பந்தம் குறித்து அமைக்கப்பட்ட கமிட்டி அறிக்கையை விரைவில் பெற்று ஊதிய உயர்வை அறிவிக்க வேண்டும். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதவி உயர்வு வழங்க வேண்டும். சங்கங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் குமார், சின்னதம்பி, ஜெயபிரகாஷ் மற்றும் சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com