

சேலம்
பாரதிய போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தின் தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாரதிய மஸ்தூர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சிவகுமார் தலைமை தாங்கினார். மாநில தலைவர் பாலசுப்பிரமணியம், பொதுச்செயலாளர் விமேஸ்வரன், போக்குவரத்து பேரவை மாநில பொருளாளர் பாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து நிலுவை தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும். குறைந்தபட்ச அடிப்படை ஊதியமாக ரூ.24 ஆயிரம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெறும் அன்றே அனைத்து பணப்பயன்களையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.