தாரமங்கலம், எடப்பாடியில்போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தாரமங்கலம், எடப்பாடியில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாரமங்கலம், எடப்பாடியில்போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

தாரமங்கலம்

தாரமங்கலம், எடப்பாடியில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தாரமங்கலம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சி.ஐ.டி.யு. கிளை தலைவர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். மைய சங்க பொருளாளர் சேகர், கிளைச்செயலாளர் பழனிவேல் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்கக்கூடாது. போதுமான பணியாளர்களை உடனே நியமனம் செய்ய வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும். ஊதிய பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் கிளை பொருளாளர் விஸ்வநாதன் மற்றும் நிர்வாகிகள் முருகன், காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எடப்பாடி

எடப்பாடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எடப்பாடி போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கிளைத்தலைவர் செங்கோட்டையன் தலைமை தாங்கினார். இதில் போக்குவரத்து ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள், தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 8 மணி நேர பணி நேர உரிமையை பறிக்கும் வகையில் அரசு கொண்டுவர உள்ள புதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com