எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்

கடையநல்லூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்
எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்
Published on

கடையநல்லூர்:

பாபர் மசூதி இடிப்பு தினமான நேற்று தென்காசி மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் மாவட்ட பொதுச்செயலாளர் சிக்கந்தர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் செய்யது மஹ்மூத், மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் திவான் ஒலி, மாவட்ட செயலாளர் செய்யது அலி பாதுஷா, மாவட்ட பொருளாளர் ஹக்கீம், தமிழப்புலிகள் கட்சி தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வைத்தனர். மாவட்ட செயலாளர் நூர் முஹம்மது வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக், , தமிழப்புலிகள் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் முத்துக்குமார், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தென்காசி மாவட்ட தலைவர் யாசர்கான் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாடத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com